குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் ஆயிரத்து 500 பேரை உடனடியாக பணிக்கு உள்ளீர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்கள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் பல நிறுவனங்களில் ஆட்சேர்ப்புகளுக்கு கோரிக்கை விடுக்கின்றது. சுகாதார சேவை என்பது அத்தியாவசிய சேவையாகும். இதன்காரணமாகவே இந்த ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தற்போது அரச பணியாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மாதாந்தம் அரச பணியாளர்களுக்கு மாத்திரம் 95 பில்லியன் ரூபாய் வேதனமாக வழங்கப்படுகின்றது. ஆகையால் நாட்டுக்கு சுமையில்லாத அரச பணியாளர்களை உருவாக்கவே அரசாங்கம் செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.