முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.< இதன்போது, இன்று ஆரம்பமாகவிருந்த அகழ்வு பணிகளை அடுத்த மாதம் 20ஆம் திகதி முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.