நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6′ மேற்கொள்ளும் ஆய்வுகளில் இன்று தமது ஆய்வுக் குழு இணையவுள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளில் தமது நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் இந்த ஆய்வுகளில் இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
		    
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது காலாவதியான கடவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அல்லது அதனை தவறவிட்ட இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை விடுத்துஇ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பிரவேசிப்பதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தி குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 
குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் ஆயிரத்து 500 பேரை உடனடியாக பணிக்கு உள்ளீர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்கள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு சக்திவாய்ந்த போர்க்கப்பல்  நங்கூரமிட்டுள்ளது. தென் கொரிய குடியரசுக்கு சொந்தமான Gwanggaeto The Great எனும் கப்பலே நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இந்த கப்பல் நேற்று (26) காலை இலங்கையை  வந்தடைந்தது. கப்பலில் 249 பணியாளர்கள் உள்ளனர். 135 மீட்டர் நீளமுள்ள Gwanggaeto The Great போர்க் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Kim Hyoung Churl செயற்படுகின்றார்.  
தான் தெரிவு செய்த பிரதிநிதியிடமிருந்து ஒரு நற்சான்றுக் கையெழுத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஒரு சமூகம் வாழுதென்றால் அது திருமலை மாவட்ட தமிழர் சமூகமாகத்தான் இருக்க முடியும். அந்த மக்களின் நன்மை தீமைகளில் பங்கெடுக்க ஆளில்லை. நலன்களை சென்று பார்க்க ஆளில்லை. அவர்களுக்காக பேசவும் ஆளில்லை.
Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பரபரப்பை  உருவாக்கியுள்ளது.  இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சீனாவின் மூன்று போர்க் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிட்டுள்ள ஆய்வுக் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் இரண்டு தடவைகள் நீர்த்தரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர் செயற்பாட்டுக் குழு இந்த பேரணியை முன்னெடுத்தது. 
அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் பொதுமக்களால் செலுத்தப்படும் சகல கொடுப்பனவுகளையும் அடுத்த வருடம் முதல் இணையவழியூடாக செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து, பொதுமக்கள் மதிப்பீட்டு வரி, ஏக்கர் வரி உள்ளிட்ட வரிகளை இணையவழி மூலம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
மட்டக்களப்பு புதூர் வீச்சுக் கல்முனையைச் சேர்ந்தவரும் தோழர் பாபு அவர்களின் அன்புத் துணைவியாருமான திருமதி ஜெயசீலன் சகாயராணி அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (26.10.2023) மரணமெய்தினார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.