யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் தற்போதுள்ள பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துதல், டியூட்டி பிரியை ஸ்தாபித்தல், சுகாதார வசதிகளை அதிகரித்தல், குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளுக்கான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பயணிகள் வசதிகள் விரிவுபடுத்தப்படும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். Read more
தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பளப் பிரச்சினை அடங்கலாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி கல்வி அமைச்சு நோக்கி பேரணியொன்றை முன்னெடுக்க முயன்ற ஆசிரியர் குழாத்தினரை பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் செய்து கலைத்தனர். அதிபர் , ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணி பெலவத்தை புத்ததாச மைதானத்திற்கு முன்பாக இன்று (24) பகல் ஆரம்பமானது.
சீனா அதன் இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் அந்நாட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளை சீனா அதன் உலக இராணுவ விநியோக மையங்களாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முன்பள்ளிகளின் சண்டிலிப்பாய் கோட்ட கிளைச் சங்கத்தின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. இச் சங்கத்தின் இணைப்பாளர் திருமதி யோகேந்திரன் கேமநளனி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் (23/10/2023) இன்று நடைபெற்ற சரஸ்வதி பூஜை மற்றும் கலைவிழா….
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் இருநாடுகளும் கூட்டறிக்கையொன்றை வௌியிட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதி மற்றும் துணை பிரதமரைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன – இலங்கை பாரம்பரிய நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்த விஜயத்தின் போது பொதுவான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவினால் சில அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு அமைய, கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக டொக்டர் ரமேஷ் பத்திரண, கைத்தொழில் அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று..