தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. Read more
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
பலஸ்தீன தேசத்தின் மீது, அங்குள்ள பொதுமக்களின் நிலைகள் மீது, இஸ்ரேல் தொடர்ச்சியாக நடாத்திவரும் கனரக படைக் கருவிகளிலான தாக்குதல்களை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வன்மையாகக் கண்டிப்பதோடு பலஸ்தீன தேசத்து மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு தொடர்ச்சியான எமது ஆதரவையும் உறுதிப்படுத்திக் கொள்கிறது.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சுமார் 60 ஆதிவாசிகள் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த குழுவினரை வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் வரவேற்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினரின் தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் 36 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றி , உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஹர்த்தால் யாழ் மாவட்டம்…
முடங்கிய வவுனியா நகரம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிஜீங் நகரில் இன்று (20) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம், தமிழ் பேசும் மக்கள் மீதான அழுத்தங்கள், காணி அபகரிப்பு, மயிலத்தமடு – மாதவனை விவகாரம், சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடையடைப்பு இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் (20) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நான்கு தசாப்தங்களின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.