Header image alt text

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை  வௌியிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அப்போதைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என கருத்து வௌியிட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி,  மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இராமேஸ்வரம் மீனவர்கள் இராமேஸ்வரம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more

எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மட்டக்களப்பு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுகின்றமை, தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்பில் வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read more

எதிர்வரும் 20ம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்பில் வடக்கு கிழக்கு முழுவதும் எதிவரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read more

18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். Read more

ஜோர்தான் – இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இலங்கை பெண்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். குறித்த இருவர் பற்றிய தகவல்கள் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக காணாமல் போன 2 இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நிமல் பண்டார தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசிய ஜனாதிபதி ஜொக்கோ விடோடோவை (Joko Widodo) சந்தித்துள்ளார். சீன விஜயத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான யுத்தத்தில் பலஸ்தீனத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், பலஸ்தீன தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது, ஏற்பட்டுள்ள மோதலை பேச்சுவார்த்தையினூடாக தீர்த்துக்கொள்வது, இருநாட்டு மக்களினதும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். Read more

16.10.2018இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரமேஷ் (பெரியண்ணன் ஜெகதீஸ்வரன் – வவுனியா) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று….