பொலிஸ் நிலையங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில், பொலிஸ் தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி இடைநீக்கம் செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பானவர்களும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவைச் சென்றடைந்துள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்போது, பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பிரச்சினை தொடர்பில் இன்று(15) ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறைமா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற சாந்தன், தாம் தாயகம் திரும்பி தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு இது தொடர்பிலான மனுவை அவர் அனுப்பி வைத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் தமக்கு தீவிரமான கரிசனை இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது இந்த சட்டமூலங்கள் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. எனவே, அவை மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சுமார் நான்கு தசாப்தங்களின் பின்னர் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி (Cheriyapani) பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுகளைத் தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கிணங்க, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.
ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
நசீர் அஹமட் வகித்து வந்த சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சு தமது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென தீர்மானித்து, ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்த நசீர் அஹமட், கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைச்சுப் பதவியை பெற்றதனால், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார்.
12.10.1998இல் வவுனியாவில் மரணித்த தோழர் மாறன் (மார்க்கண்டு தேவதாசன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுகள்….