அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. Brunswick எனப்படும் இந்த கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்குமென கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 24 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன. நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
டேவிட் ஐயா என கழகத் தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்களின் எட்டாமாண்டு நினைவு நாள் இன்று….
இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வௌியுறவு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னர் மாத்திரம், இனிவரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்களின் காரணமாக உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (11) கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில், வைத்தியர்களுக்கான சம்பளத்தை வழங்கும் நடைமுறையை தயாரித்தல், வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரித்தல், சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவற்றுள் அடங்குகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இன்று (10) மாலை இலங்கைக்கு வருகை தந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவரும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்தார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
மலர்வு 1956.02.06 உதிர்வு 09.10.2016
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(09) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கிழக்கு அபிவிருத்தி மையம் ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை பேரணியாகச் சென்று மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு செயற்பாடு திருகோணமலையில் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.