இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான 249 பேரில் ஆகக்கூடுதலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களின் எண்ணிக்கை 63 ஆகும்.

கொழும்பில் 42 பேரும், கம்பஹாவில் 33 பேரும், பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 14 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 11 பேருமாக நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் 09 பேரும், திருகோணமலையில் 08 பேரும், மாத்தளையில் 07 பேரும் நேற்றைய தினம் நோய்தொற்றுக்குள்ளானவர்களாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா 05 பேர் வீதமும், இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 04 பேரும், குருநாகல், வவுனியா மற்றும் மெனராகலை மாவட்டங்களில் 03 பேரும், கேகாலை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 02 பேர் வீதம் தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் நேற்றைய தினம் தலா ஒருவர் வீதம் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மத்தியில் இடம்பெற்றிருப்பதாக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.