 வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதன் ஆரம்ப விழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்தார்.
கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ள அறிவிப்பு நேற்று (06) இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நிகழ்வும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.