இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவையை ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் தன்னிடம் அறிவித்ததாக  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் படகு சேவை தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கும் மன்னாரில் இருந்து இந்தியாவிற்கும் படகு சேவையை ஆரம்பிப்பதில் உள்ள தடைகளை புரிந்துகொள்ள முடியவில்லை என சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது, காங்கேசன்துறை துறைமுகத்தில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் படகு சேவையை ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஆரம்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.