ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் இன்றுகாலை 9:30 மணியளவில் கட்சியின் துணைத்தலைவர் பொன்.செல்லத்துரை அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) அவர்களின் இல்லத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன் அவர்களும், அம்பாறை மாவட்ட பொருளாளர் ஜப்பார் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாவட்ட நிர்வாகத்தில் காணப்படுகின்ற மத்தியகுழு உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல், மாவட்ட பொருளாளரின் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இதில் மாவட்ட அமைப்பாளராக மீண்டும் ம.நிஸ்கானந்தராஜா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதோடு, கா.கமலநாதன் அவர்களின் மத்தியகுழு வெற்றிடத்திற்கு ம.நிஸ்கானந்தராஜா (சூட்டி) அவர்களின் பெயரும், அமரர் கிருபைராஜா அவர்களின் வெற்றிடத்திற்கு க.விமலநாதன் அவர்களின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட பொருளாளராக கணேசன் கிருஷ்ணராஜாஜி அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதோடு, மாவட்டத்தினுடைய இளைஞர் அணி பொறுப்பாளராக கணபதிப்பிள்ளை லோகநாதன் அவர்களின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் பொன்.செல்லத்துரை, மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா, செயலாளர் கா.கமலநாதன், கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ந.ராகவன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கோமதி உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

