02.10.2023 ஆகிய இன்று திருகோணமலை பாலையூற்று கோவிலடி கிராமப்பகுதியில் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் மாதர்களுக்கான இலவச தையல் தொழிற்பயிற்சி ஆரம்பமாகியது.
இதில் அனுபவம் மற்றும் உயர் தரச்சான்றிதழ் பெற்ற ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் மாதர்களுக்கான கற்பித்தல் செயற்பாடு மிகவும் தெளிவான விளக்கத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.