நசீர் அஹமட் வகித்து வந்த சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சு தமது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென தீர்மானித்து, ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்த நசீர் அஹமட், கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைச்சுப் பதவியை பெற்றதனால், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் சட்டபூர்வமானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனால் நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமை குறிப்பிடத்தக்கது.