ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவைச் சென்றடைந்துள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்போது, பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்தவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 20ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.