அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் பொதுமக்களால் செலுத்தப்படும் சகல கொடுப்பனவுகளையும் அடுத்த வருடம் முதல் இணையவழியூடாக செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து, பொதுமக்கள் மதிப்பீட்டு வரி, ஏக்கர் வரி உள்ளிட்ட வரிகளை இணையவழி மூலம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அரச வரி வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், பொதுமக்களுக்கு வரிகளை செலுத்துவதற்குஇந்த இணையவழி முறைமை சாதகமாகவும் இலகுவாகவும் அமையும் என மாகாண மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.