அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை-

 அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை சிவராத்திரி தினமான இன்று (27.02.2014) சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தானத்திலிருந்து வாழ்நாள் சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேவஸ்தான குரு சிவஸ்ரீ.சபா வாசுதேவக்குருக்கள் அவர்களால் யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த சைக்கிள் யாத்திரையானது இலங்கை மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் குறித்து 408 முறைப்பாடுகள் பதிவு-
தேர்தல் சட்டமீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டவிதிகள் மீறப்பட்டமை தொடர்பில் 392 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் குறித்து 96 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 240 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் 156 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் குறிப்பிட்டுள்ளது.