Header image alt text

யாழில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் 37 ஆவது  நினைவு தினம் அனுஷ்டிப்பு-

GG Ponnampalam (13)GG Ponnampalam (4)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 37 ஆவது நினைவு தினம் யாழ் குருநகரில் உள்ள அன்னாரது நினைவுத் தூபியடியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி,  புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தர்த்தன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

GG Ponnampalam (8)GG Ponnampalam (7)GG Ponnampalam (6)GG Ponnampalam (5)GG Ponnampalam (1)GG Ponnampalam (2)GG Ponnampalam (11)GG Ponnampalam (12)GG Ponnampalam (5)

வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குடிதண்ணீர் வசதி வழங்கிவைப்பு-

kudineer vasathi valankal (5)யாழ். மல்லாகம் கோட்டக்காடு சைவ வாலிப சங்க முன்பள்ளிக்கு குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் செய்து கொடுத்துள்ளார். வசதியற்றோரின் சிறார்களது கல்வி வளர்ச்சிக்கு ‘தமது வடமாகாண சபை ஊதியத்தில் இருந்து’ உதவி செய்யும் திட்டத்தின் ஓர் பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மல்லாகம் கோட்டக்காடு சைவ வாலிப சங்க தலைவர் ராஜாராம், வரவேற்புரை நிகழ்த்தியதுடன், செயலாளர் தசரதன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் வடமாகாண சபை முதலாவது அமர்வின்போது திரு. சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்ததுக்கு அமைய தனது வடமாகாண சபை சம்பளத்தில் இதுபோன்ற உதவியை வழங்கியமையிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

kudineer vasathi valankal (1)kudineer vasathi valankal (2)kudineer vasathi valankal (3)kudineer vasathi valankal (4)kudineer vasathi valankal (6)

ஆளும் கட்சியின் வேட்பாளர் பிணையில் விடுதலை-

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அஜித் பிரசன்னஹேவா தொடங்கொடவத்த உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலியிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டிருந்த வேட்பாளர் உட்பட இருவரும் பொலிஸாரால் வளஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக தேர்தல் பேரணி நடத்தியமை, சட்டவிரோத கூட்டமொன்றுக்கு உறுப்பினராகியமை, பொலிஸ் அதிகாரியொருவரைத் தாக்கி அழுத்தம் பிரயோகித்தமை, இராணுவ சீருடையை அணுமதியின்றி அணிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம-;

புதிய விவசாய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பண்டுக்க வீரசிங்க கூறியுள்ளார். விவசாய ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ள விவசாயிகளின் வயதின் அதிகரிப்பிற்கு அமைய கொடுப்பனவு அதிகரிக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விவசாய ஓய்வூதி திட்டத்திற்கு பயனாளிகளை இணைத்திற்கொள்ளும் நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்கு கமநல காப்புறுதி சபை உத்தேசித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாப்பு திருத்தம்-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள், அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யாப்பில் காலத்துக்கு ஏற்றவகையில் சில சரத்துக்கள் திருத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நேரடியான நடவடிக்கை எடுக்கவும், தேசிய ரீதியாக விசாரணைகளை நடத்தவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் வகையில் அதன் யாப்பு சீர்த்திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இதற்கான பிரேரணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை கைதுசெய்வதை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை-

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கையிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராணயசாமி இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இலகுப்படுத்தும் வகையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் 80 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநகரில் குண்டு மீட்பு- 

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறைப் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் தெரிவித்துள்ளனர். அதன்படி கைக்குண்டு ஒன்று குருநகர் இறங்குதுறைப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் மேற்படி குண்டினை மீட்டுச் சென்றுள்ளதுடன் அதனை செயலிழக்கவும் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

இந்திய மாநில முறைமை  அமுல்படுத்தப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

untitledதனி ஈழம் ஒன்றை நிறுவ வேண்டுமென கோரவில்லை, இந்திய மாநில முறைமை இலங்கையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தினார் எனவும், தற்போது தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்துவதில்லை எனவும்;. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு தமிழ் மக்களின் 500 ஏக்கர் காணி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருவகிறார்கள் என சுட்டிக்காட்டி. ஒரே நாட்டுக்குள் எவ்வித பேதமும் இன்றி வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். (இந்திய முறையிலான தீர்வே சிறந்தது, பொருத்தமானது நாம் விரும்புவது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் நீண்ட காலமாக கூறிவருகின்றார் என்பதும்.. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் இ;வகையான ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வாய்பாய் அமைந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.)

வாள், சீருடையுடன் நால்வர் கைது- யாழில்

imagesCA2C7RO4யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் ஆலய நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலையும் மீறி இருந்த 4 பேரை தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வைத்து 07.02.14 இரவு கைது செய்துள்ளதாகவும். அத்துடன், அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச்சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாவும். நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கும் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலக்கு இடையில் மனிதாபிமானப்பணி-சிரியாவில் ஜநா

140208131451_homs_304x171_reuters_nocreditசிரியாவின் ஹோம்ஸ் நகரில் மோதலில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க ஐநா ஆயத்தமாகிவரும் சூழலில், இவ்வூரில் கடந்த மூன்று நாட்களாக இருந்துவருகின்ற போர்நிறுத்தம் குலைய மற்ற தரப்பே காரணம் என சிரியாவின் அரச படையினரும் கிளர்ச்சிக் குழுக்களும் ஒருவர் மீது மற்றவர் குற்றம்சாட்டிவருகின்றனர். கடந்த வெள்ளியன்று ஐநாவின் அனுசரணையில் நிவாரணப் பணிகள் ஆரம்பித்திருந்த இடங்களில் மோர்டார் குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன. உதவிப் பொருட்களை சுமந்துசெல்லும் வாகனத் தொடரணியால் அப்பகுதிக்கு செல்லமுடியுமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களாக எண்பதுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக அரச படைகளின் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளன. வெளியேற்றப்பட்ட மக்கள் மிகுந்த பலவீனமாக காணப்படுகிறார்கள். தாங்கள் அனுபவித்த அளவுக்கதிகமான கஷ்டங்களை இவர்கள் விவரித்துள்ளனர் என செய்திகள் தெரிpக்கின்றன.

மக்கள் சுதந்திரமாக வாக்குமூலம் அளித்தனர்- மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditஇலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவருபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் பற்றி தங்களுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் நடந்த விசாரணை அமர்வுகளின்போது, ‘மக்கள் சுதந்திரமாக, சுயவிருப்பத்துடன்’ தங்களின் வாக்குமூலங்களை அளித்துச் சென்றதாகவும் மக்கள் அச்சுறுத்தப் பட்டதாகவோ, பலவந்தப் படுத்தப்பட்டதாகவோ தமக்குத் தகவல் வரவில்லை என்றும் அவர் கூறினார். Read more