திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஒளிவிழா நிகழ்வு 12.12.2014 காலை தொடக்கம் கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி கே.மீரா தலைமையில் நடைபெற்றது. (இவ் முன்பள்ளியானது 1995 ஆம் ஆண்டு அமரர் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டது.) இந்நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்(விசு) பிரதம விருந்தினராகவும் மேலும் இந் நிகழ்வில் முன்னாள் உப நகரபிதாவும் புளொட்டின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சிறப்பு விருந்தினராக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு எஸ்.கோணேஸ்வரலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு.ஜெகதீஸ்வரன்(சிவம் புளொட்;), புளொட் உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன், திருநாவற்குள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, ஆசிரியர் ரகுபதி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் சர்மா, மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், கிராமச்சங்க உறுப்பினர்களும் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் மழலைகளின் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் புளொட் சமூக ஆர்வலர் தோழர். திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களின் அனுசரணையில் பெற்றோர் தின மற்றும் ஒழி விழா நடைபெற்றது இவ் நிகழ்வில் மழலைகளின் கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. எமது தேசத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான காவடி, கரகாட்டம் மற்றும் பாடல்கள், சிறப்பு பேச்சுக்கள் என பல நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி .லிங்கநாதன் தனதுரையில்.- திருநாவற்குளம் கிராமமானது 1990 ஆண்டு இடம்பெயர்ந்து வந்த எமது மக்களை த.ம.வி. கழகத்தினராகிய நாம் குடியேற்றிய கிராமமாகும். இது போன்று பல கிராமங்கள் த.ம.வி.கழத்தினராகிய எம்மால் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கிராம மக்களுக்கு நாம் பல வழிகளிலும் அபிவிருத்தி உதவிகளை செய்தபோதும் காணி தொடர்பான தீர்வினை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை, விரைவில் வடமாகாண முதலமைச்சர் அவர்களையும் ஏனைய அமைச்சர்களையும் இப்பகுதிக்கு வரவழைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்படும் எனவும் கூறினார். மேலும் கூறுகையில் இக்கிராம மக்களின், சிறார்களின் வளர்ச்சிக்காக 2015 ஆண்டு மாகாணசபை நிதியில் இம் மண்டபத் திருத்தத்திற்காக ரூபா 200000.00 நிதியும் உமாமகேஸ்வரன் முன்பள்ளிக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் மேலும் திருநாவற்குள விளையாட்டு மைதானத்தினை நவீனரக விளையாட்டு மைதானமாகவும், இப் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றினையும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்ததோடு. எமது விடுதலை போராட்டத்தில் இணைந்து தமதுயிரை, அவயவங்களை, உடமைகளை இழந்த எமது கழக மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்காக உமாமகேஸ்வரன் நற்பணி மன்றம் ஒன்றை உருவாக்கி உள்ளுர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் எமது தோழர்கள், நலன்வரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் உதவிகளை பெற்று விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்,

கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் (புளொட்) ஜி.ரி.லிங்கநாதனால் ஆச்சிபுரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து 07 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு ரூபா 35000.00 பெறுமதியான கூரைத்தகடுகள் அவற்றுக்கான ஆணிகள் ஆகியவற்றை வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் பிரமான அடிப்படையிலான 2014 நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இவ் உதவியை நல்கிய வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கூறுகையில் உங்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு இத்தகரங்கள் வழங்கப்படகின்றன, இதனை சரியான முறையில் பாவிப்பதன் மூலம் நீண்டகாலம் பயன்படுத்ததக்கதாக இருக்கும் என்பதோடு தொடர்ந்தும் இனம் காணப்பட்ட மக்களுக்கு 2015 ஆண்டு நிதியில் இவ்வாறான உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு. ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்களும் கலந்துகொண்டார்.

வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு வைத்திய நிலையப் பகுதியினை (06.12.2014) கௌரவ வட மாகாணசபை முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றகையில் வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தசுத்திகரிப்பு நிலையமானது இம் மாவட்ட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும். ஏனெனில் தற்போது இவ் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் சென்று வரவேண்டியுள்ளது இனிவரும் காலங்களில் வவுனியா வைத்தியசாலையில் இச்சிகிச்சையை அவர்கள் மேற்கொள்ளமுடியும். மேலும், வவுனியா வைத்தியசாலையின் முன்பாக உள்ள கட்டிடம் புளொட் அமைப்பின் தலைவர் கௌரவ சித்தார்த்தன் அவர்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரின் வேண்டுகோளுக்கமைவாக சுகாதார அமைச்சராக இருந்த திரு.பௌசி அவர்களினால் கட்டப்பட்டதாகும் எனகுறிப்பிட்டார். தொடர்ந்து தனதுரையில் கிராமபுற வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி, வளப்பற்றக்குறைகளையும் தீர்க்கப்படும் பட்சத்தில் கிராமப்புற மக்களும் தமது வைத்திய சேவையை இலகுவாக பெற்றுக கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவே இச்சந்தர்ப்பத்தில் கௌரவ முதலமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் எனது கோரிக்கையை மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன் என்றார்.

