வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு வைத்திய நிலையப் பகுதியினை (06.12.2014) கௌரவ வட மாகாணசபை முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றகையில் வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தசுத்திகரிப்பு நிலையமானது இம் மாவட்ட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும். ஏனெனில் தற்போது இவ் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் சென்று வரவேண்டியுள்ளது இனிவரும் காலங்களில் வவுனியா வைத்தியசாலையில் இச்சிகிச்சையை அவர்கள் மேற்கொள்ளமுடியும். மேலும், வவுனியா வைத்தியசாலையின் முன்பாக உள்ள கட்டிடம் புளொட் அமைப்பின் தலைவர் கௌரவ சித்தார்த்தன் அவர்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரின் வேண்டுகோளுக்கமைவாக சுகாதார அமைச்சராக இருந்த திரு.பௌசி அவர்களினால் கட்டப்பட்டதாகும் எனகுறிப்பிட்டார். தொடர்ந்து தனதுரையில் கிராமபுற வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி, வளப்பற்றக்குறைகளையும் தீர்க்கப்படும் பட்சத்தில் கிராமப்புற மக்களும் தமது வைத்திய சேவையை இலகுவாக பெற்றுக கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவே இச்சந்தர்ப்பத்தில் கௌரவ முதலமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் எனது கோரிக்கையை மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன் என்றார்.