மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள், தேவைகள் குறித்து ஆராய்வு-
03.12.2014 அன்று வலி மேற்கின் பல பகுதிகளிலும் பெய்த கடும் மழைகாரணமாக மக்கள் பலரும் தமது குடியிருப்புக்களை விட்டு இடம்பெயாந்து அல்லல்படட்னர் இவ் வேளை முளாய் பகுதியிலுள்ள அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காட்டுப்புலம் பாடசாலை, இன்பச்சோலைப் பகுதி மற்றும் அராலி ஐயனர் கோவில் பகுதிகளில் இந்த மக்கள் தஞ்சம் புகுந்தனர் இவ் நிலைமையை உடனடியாக வலிமேற்க பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனுக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக தவிசாளர் அவ் விடத்திற்கு வருகை தந்து மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இவ் விடயம் குறித்து அறிந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ன உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் உடனடியாக மக்கள் தஞ்சம் அடைந்த இடத்திற்கு வருகை தந்தார். அவருடன் புளொட்டின் நோர்வே கிளை அமைப்பானர் திரு இராசசிங்கம் சிவராசா (ராஜன்) அவர்களும் வருகை தந்திருந்தார் இவ் நிலையில் அப்பகுதி கிராம சேவகர் சிறிரஞ்சன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் வந்திருந்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுடைய தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்கள்.




அதிக மழையினால் மக்கள் பாதிப்பு, உதவி வழங்குமாறு கோரிக்கை-
கடந்த 1ம் திகதி முதலாக மிக அதிகமான மழை பெய்து வரும் மழைகாரணமாக பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்புக்கு உட்பட்டனர் இவ் நிலையில் வலி மேற்கு பிரதேசத்திலும் காணப்பட்டது இவ் நிலையில் மக்களை அனர்தப் பாதிப்பில் பாதுகாக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபையினர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தினர் இணைந்து மக்கள் பணியில் ஈடுபட்டனர். இவ் பணியில் பிரதேசத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மக்களுக்கான உதவும் பணிகளில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான உதவிகளை உடன் வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளருக்கு கோரிக்கை வித்துள்ளார்
கனகரத்தினம் வீதி செப்பனிடல், ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு-
மிக நீண் காலமாக செப்பனிப்படாது இருந்த வட்டுக்கோட்டை கனகரத்தினம் வீதி வட மாகாண முதமைச்சர் நிதி ஓதுக்கீடடினால் வலி மேற்கு பிரதேச சபையின் கீழ் புனரமைப்பு செய்யப்படுகின்றது மேற்படி வேலைத் திட்டத்ததினை வட்;டு தென் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக மேற்கொள்ளப் படுகின்றது மேற்படி வேலைத் திட்டத்தினை வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் நேரடியாக நின்று நெரடியாக நின்று வழிப்படுத்தி வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.இவ் வேலைத் தி;ம் தொடர்பில் வட்டு தென் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரையே கண்காணிப்பு குழுவாக நியம்க்கப்படுள்ளனர். வலி மேற்கு பிரதேசத்தில் நடை பெறும் வேலைகள் தொர்பில் கண்காணிப்பு குழுவை தவிசாளர் நியமித்து வருவது நடை முறையில் உள்ள விடயம் ஆகும் 05.12.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்தி அவர்களது பன்முகப்படுதப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா.50000 ஓலி பெருக்கி சாதனங்கள் வட்டுக்கோட்டை மாவடி அடைக்கலம் தோட்ட கந்தசுவாமி கோவில் நிர்வகத்திடம் ஒப்படைத்தார்.
02.12.2014 அன்று மிக அதிக மழை காரணமாக வலி மேற்கின் பல பகுதிகளிலும் உள்ள குடியிருப்புக்களுக்குள்; வெள்ளம் புகுந்து கொண்டது. இதற்கும் மேலாக பல ஏக்கர் கணக்கான விவசாய நிலம் பாதிக்கப்பது. இவ் நிலையில் சங்கானை மற்றும் அராலி பகுதி விவசாய சம்மேளனங்கள் மேற்படி நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டி இப் பிரதேசத்திலுள்ள வான் கதவுகளை திறக்குமாறு சங்கானை பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர் இவ் நிலையில் மாலை வரை வான் ககதவுகள் திறக்கப்படா நிலையில் மேற்படி கதவுகளை மக்கள் தாமாகவே திறக்க முட்படனர் இவ் வியம் பற்றி வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் மக்களின் நலன் கொண்டு சம்பவம் பற்றி உடனடியாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் நீர் பாசன பெறியியலாளருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய காணிக்ள் பாதுகாக்கப்பட்டது.


எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பிரதான கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பிரதான கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுவேட்பாளரின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த 30ஆம் திகதி பொலனறுவையில் இடம்பெற்றது. இந்நிலையில், வடமத்திய மாகாணத்தை குறிவைத்து மகிந்த ராஜபக்சவின் முதலாவது பிரசாரக் கூட்டமும் எதிர்வரும் 11 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வவுனியா எல்லப்பர்மருதங்குளம் கணேஷா முன்பள்ளியில் ஒளி விழாவும் முன்பள்ளி சிறார்களின் பிரியாவிடை நிகழ்வும் இன்று (04.12.2014) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி.செல்வராணி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும், கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு.ராஜசேகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அருள்குமார், குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. பிரவீனா ஆகியோரும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.













வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியில் பெற்றோர்தின விழா நேற்று (03.12.2014) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கௌரவ விருந்தினராக தெற்கு தமிழ் பிரதேசசபை உப தலைவர் திரு.ரவி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திடீர்மரண விசாரணை அதிகாரி திரு. சுரேந்திரசேகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், கூட்டுறவு காப்புறுதி உத்தியோகத்தர்கள், சித்தாலேப்ப நிறுவன உத்தியோகத்தர்கள், முத்து மாரி அம்மன் ஆலய தலைவர் திரு.தியாகராஜா மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ரவிதரன், சமூக ஆர்வலர் திரு.மகேந்திரராஜா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் திரு. கண்ணதாசன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் கோயில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது முன்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கோயில்குளம் இளைஞர் கழக அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. இதனை வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வழங்கி வைத்தார்.
இலங்கையின் மத்தியஸ்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உன்னதமான பணியை வரவேற்கும் பொருட்டு 2014 மார்கழி மாதம் 01ஆம் நாளன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் தேசிய வைபவத்தின்போது வவுனியா மத்தியஸ்த சபை (262) தவிசாளர் திரு.சிதம்பரப்பிள்ளை வரதராஜா அவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா சிதம்பரபுரம் சிறீ நாகராஜா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வருவதுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைமானிப் பட்டதாரியும், திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் டிப்ளோமாவும், அத்துடன் முதுகலைமானிப் பட்டதாரியுமாவார். இவர் முன்னாள் ஆசிகுள பதிவாளர் அமரர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் மகனுமாவார்.
தமது விடுதலையை வலியுறுத்தி, யாழ். சிறையிலுள்ள 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கடந்த நவம்பர் 21 அன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 5ம் திகதி வரையிலும் ஐந்தாவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 விசைப்படகுகளுடன் தங்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த செவ்வாய்கிழமை மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். யாழிலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி மூர்த்தி சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கடந்த அக்டோபர் 27, 28 ஆகிய இரண்டு தினங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என யாழ்ப இந்திய துணைத்தூதரகம் அளித்த வாக்குறுதிகளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால், இம்முறை மீனவர்கள் தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவளை கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது,
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்தில் இலங்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்தப் பட்டியலில் 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது. மேலும் ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் அதிக ஊழல் இடம்பெறும் நாடுகளாக திகழ்கின்றன.
திருகோணமலை சம்பூர் பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 32 வயதான ஸ்கந்தராஜா என்பவரே கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைதாகியுள்ளார். அவரை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் இன்று விழிப்புணர்வு ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளின் விழிப்புணர்வு ஊர்வலமொன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மகாத்மா காந்தி சதுக்கத்தில் ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் புனித மெதடிஸ் ஆலயத்தில் நிறைவுற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விழிப்புணர்வுப் பதாகைளை ஏந்திச் சென்றனர். இதேவேளை, வவுனியா மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்துகொண்ட ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபத்தில் நிறைவடைந்தது. அதனையடுத்து, நகர சபை மண்டபத்தில் மாற்றுதிறனாளிகள் கலை நிகழ்வுகளும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது. மேலும் யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவன ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத் தலைவர் ஜெ.கணேசமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குக் கைதடி அரச முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் தமது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல், பாடல் பட்டிமன்றங்களையும் மேடையேற்றினர். மேலும் இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் பயனாளி செ.சிவப்பிரகாசம் குறித்த நிறுவனத்தின் நிர்வாகச் செயலர் இ.இரத்தினசிங்கம் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின்போது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்த கீழ்க்காணும் ஆவணங்களுள் ஒன்றை கட்டாயமாக சமர்ப்பித்தல் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார் இதன்படி வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றையாவது சமர்ப்பித்தல் வேண்டும். எவ்வாறாயினும் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும் மேற்கூறியவற்றில் ஏதேனுமொரு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தேர்தல் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகின்ற விசேட அடையாள அட்டையை வழங்குவதற்கு கிராமசேவை அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன விசேட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள் வாக்கெடுப்புக்கு ஏழு நாட்கள் முன்னர் அதாவது எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அண்மையில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை நிறத்திலான அல்லது வர்ணத்தில் 2 சென்ரி மீற்றர் அகலத்தையும் 3சென்ரி மீற்றர் உயரத்தையும் கொண்ட மேலும் இரண்டு புகைப்படங்களை கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் இவ் அடையாள அட்டைகள் தேர்தல்கள் அலுவலகத்தின் பதவி நிலை அலுவலரின் ஒப்பந்தத்துடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தேசிய சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாட்டுக்கு புதிய யாப்பு அறிமுகப்படுத்தல் மற்றும் சட்டம், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்மேளனத்தின் செயலாளர் பாகியங்கல ஆனந்த தேரர் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும் மது அற்ற சமூகமொன்றை உருவாக்குவது தொடர்பில் சரியான வேலைத் திட்டம் தயாரிப்பது குறித்து மைத்திரிபாலவுடன் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களுக்கே தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு பகுதியில் துப்பாக்கிகள் இரண்டும், ரவைகளும், விமானத்தைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இரண்டும், மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் நேற்றையதினம் நடத்திய தேடுதலின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரால் தேர்தல்கள் செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக வலிவடக்கு பகுதி மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் தீவகம், தென்மராட்சி, வடமராட்சி, பருத்தித்துறை, காக்கைதீவு, பொம்மைவெளி ஆகிய தாழ் நில பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 790 குடும்பங்களும் பாதிக்கப்படுள்ளன காக்கைதீவு, மாதகல் மேற்கு பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் இடம்பெயர்ந்து காக்கைதீவு கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச்செய்வதற்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் இடம்பெறும் பல்வேறு ஊழல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளோம். ஐ.தே.கட்சி தலைமைத்துவத்துடன் கடந்த காலங்களில் கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும், தற்போது அவற்றை நீக்கி, கட்சியை ஒன்றிணைக்கவுள்ளோம். பெருந்தோட்டத்துறை மக்களுக்காக ஒதுக்கப்படுகின்ற வளத்தைப் போன்று, நுவரெலியா மாவட்டத்தின் கிராமிய மக்களுக்கும் வளங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக கோரிவந்தும், எனது கோரிக்கை நிறைவேற்றப்படாமையே, அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்தேன் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்து வெளியேறியது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் சார்க் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கை உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 50 மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று (31.11.2014)காலை 9.30 மணியளவில் வவுனியா திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
வவுனியா நகரசபையும் பொது நூலகமும் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் (29.11.2014) காலை 9.00 மணியளவில் நகரசபை கலாசார மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கௌரவ திரு.எஸ்.திருவாகரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன், புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயதிலக்க, வவுனியா பிரதேச சபைகளின் செயலாளர்கள், கலாநிதி தமிழ்மணி அகளங்கன் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தலைவர் சேனாதிராசா, வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், மற்றும் வாசகர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நகரசபை மற்றும் பொது நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர் கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் பாடசாலை, புதுவாழ்வுப் பூங்கா மற்றும் கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 14 பாடசாலைகளைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கு வங்கி கணக்குகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.















