கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

kandaiya school 26.06.2015 (1)முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ்.நவரட்னம் அவர்களின் ஞாபகார்த்தமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (26.06.2015) பிற்பகல் 1மணியளவில் யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ் நவரட்னம் அவர்களது ஞாபகார்த்தமாக வெளிநாட்டில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் நிதியுதவி வழங்கி வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றை வருடாவருடம் வழங்கி வருகின்றனர். இந்தவகையில் பன்னிரண்டாவது தடவையாக நேற்றையதினம் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நவரட்னம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக திரு. இ.சுத்தானந்தன் (சிறி) அவர்கள் இதற்கான முழு ஒழுங்கினையும் செய்திருந்தார்.

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் அதிபர் திரு. சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி. பேரின்பநாதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம், கல்வி வலயம்), திரு. சா.தேவமனோகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல், வலிகாமம், கல்வி வலயம்), திருமதி அன்ரீன் வலன்ரீனா (கிராம சேவையாளர், கந்தரோடைப் பிரிவு), உபஅதிபர் திருமதி. த.நடேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வின்போது வறுமைக்கோட்டின்கீழ் உள்ள 100ற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், சப்பாத்து தேவையுடைய பிள்ளைகளுக்கான சப்பாத்துக்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

வறுமைக்கோட்டின்கீழ் வாழுகின்ற பிள்ளைகளின் கல்வியினை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக எஸ்.எஸ் நவரட்னம் அவர்களுடைய குடும்பத்தினர் செய்து வருகின்ற உதவி மிகப் பெரிய ஒரு உதவியாகும். இன்றைய நிலையில் எம்மை உயர்த்தக்கூடிய விடயம் கல்வி ஒன்றுதான். இன்று (26.06.2015) மது, போதைவஸ்து ஒழிப்பு தினமாகும். இத் தினத்திலே இந்த செய்தியினை மாணவர்கள் ஒரு முக்கிய விடயமாக மனத்திற் கொள்ளவேண்டும். ஏனென்றால் உங்கள் வீடுகளில் அல்லது அயலிலே இருக்கக்கூடிய மதுவுக்கு அல்லது போதைவஸ்துக்கு அடிமையானவர்களை திருத்த வேண்டியது எமது சமூகத்தினது கடமை. இது மாணவர்களது கடமையுமாகும். இந்தக் கடமையை நாங்கள் செவ்வனே செய்யாவிட்டால் ஒரு மிகப்பெரிய சீரழிந்த சமுதாயம் உருவாகிவிடும். கல்வி எமக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் இன்று யாழ்ப்பாணம் இருக்கின்ற நிலையில் மது, போதைவஸ்து என்பவற்றை ஒழிப்பதனை ஒரு மிக முக்கியமான கடமையாக ஏற்று நாங்கள் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் என்று கூறினார். ஆசிரியர் திரு. சாந்தகுமார் அவர்கள் நன்றியுரையினை நிகழ்த்தினார்

kandaiya school 26.06.2015 (1)kandaiya school 26.06.2015 (5)kandaiya school 26.06.2015 (8) kandaiya school 26.06.2015 (2) kandaiya school 26.06.2015 (7) kandaiya school 26.06.2015 (4) kandaiya school 26.06.2015 (3)