Header image alt text

கட்சி தாவும் சந்தர்ப்பவாதிகளுக்கு சவுக்கடி கொடுங்கள்-உமாவசந்தன்

voteதாயகத் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து செயற்படவேண்டிய தேர்தல் காலம் இது. இன்று தங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கும் பலர் இதற்கு முன் எங்கு இருந்தார்கள் என்பதை சிந்தித்துப்பாருங்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்ட பலர் இன்று மீண்டும் வாக்குக் கேட்டு தங்கள்முன் தோன்றியிருக்கின்றார்கள். இவர்களில் எத்தனைபேர் தன்னைத் தமிழ் மக்களுக்கு அறிமுகபடுத்திய கட்சிக்காக வாக்குக்கேட்டு வந்திருக்கின்றார்கள்?.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடம் பணத்திற்காவும், அற்ப சலுகைகளுக்காகவும், தமது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை விலைபேசி விற்றுவிட்டு மீண்டும் தமது சுயலாபத்திற்காக தமிழர்களின் வாக்குபலத்தை சிதறடிக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள பேரினவாத சக்திகளால்; மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்காக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

Read more

தேர்தல் சட்டமீறல்கள் பற்றிய 732 முறைப்பாடுகள் பதிவு-

election violenceதேர்தல் சட்டமீறல்கள் குறித்து இதுவரையில் 732 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதிகப்படியாக 122 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 44 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 31 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட பதவி உயர்வுகள் புதிய நியமனங்கள் என்பன குறித்து கிடைத்துள்ள முறைப்பாட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் குறித்து 164 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன இதேவேளை சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரோட்டிகள் ஒட்டுகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தல் என்பன குறித்து 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள்மீது சூடு, பெண் பலி, 11பேர் காயம்-

raviகொழும்பு கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் காயமடைந்த 11 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகின்றது. நவீன ரக காரொன்றில் வருகைதந்த சிலர் இன்று முற்பகல 11.45 அளவில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்பின் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மஹிந்த வரைமுறையினை மீறுவதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு-

ranil (5)முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழமைக்கு மாறாகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தமக்கு பிரதமர் பதவி வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால கூட்டமைப்பில் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை. மஹிந்வை பிரதமராக்க முடியாது அவரால் வெற்றிப்பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வரைமுறைகளை மீறியே மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேவேளை தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் தொடர்பில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேர்தல் சட்டமீற்ல்கள் தொடர்பில் 89 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. குறித்த சுற்றி வளைப்பின் போது 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அடுத்து 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தல் தொடர்பில் இத வரை 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவின் வாகனம் பறிமுதல்-

cp ratnaikeஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ. ரத்நாயக்கவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் ஒன்று இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஹட்டன் பொலிஸாரினாரல் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனம் ஹட்டன் மல்லியப்பு சந்தி அருகில் நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தர்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் சீ.பீ. ரத்நாயக்கவின் புதல்வரும் சாரதியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுடன் தொடர்புடைய வேட்பாளர் இல்லாமல் இருந்த காரணத்தினாலேயே வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஸ்டிக்கர்களை அகற்றிய பின்னர் வாகனத்தை மீண்டும் சீ.பீ.ரத்நாயக்கவின் புதல்வரிடம் கையளித்துள்ளனர்.

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நால்வர் கைது-

arrestயாழ். சாவகச்சேரி நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் நால்வர் இன்று நண்பகலில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிக்குப் புறம்பான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதால் குறித்த நால்வரையும் கைதுசெய்ததாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழ் தேசிய முன்னணியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் செல்வராஜா கஜேந்திரனின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சாதனை பெற்ற மாணவி கமலினி கௌரவிப்பு, பரிசில்கள் வழங்கி வைப்பு-(படங்கள் இணைப்பு)-

photo 5யாழ். வட்டு மத்திய கல்லூரி மாணவி செல்வி. ம. கமலினி மாகாண மட்டத்தில் நடந்த மெய்வல்லுனர் போட்;டியில் 100மீ 200மீ நீளம்பாய்தல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்றுள்ளதுடன் நீளம்பாய்தல் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். எனவே இம் மாணவியின் சாதனையை பாராட்டி கல்லூரி சமூகத்தினாலும் ஊர்மக்களினாலும் பழைய மாணவர்களாலும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினாலும் இம் மாணவியின் சாதனையை கௌரவிக்கும் முகமாக 29.07.2015அன்று பங்குறு வைரவர் ஆலயத்திலிருந்து அழைத்துவரப்பட்டு பாடசாலை விழா மண்டபத்தில் வைத்து கௌரவிப்பு இடம்பெற்றது. அத்துடன் இம் மாணவியினால் இதுவரை காலமும் வெற்றிபேற்ற பதக்கங்களும் சான்றிதழ்களும் விழா மேடையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இம் மாணவிக்கு பரிசில்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

Read more

நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க இலங்கை நிதியுதவி-

nepal nepalநேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவியளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேபாள பூமியதிர்ச்சியினால் பல மதஸ்தலங்கள் சேதமடைந்தன. அவற்றில் முக்கிய இரு மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த புனர்நிர்மாணப் பணிகளை திட்டமிடுவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நேபாளம் அனுப்புவதற்கும், குறித்த நிர்மான பணிகளை முன்னெடுக்கும் பணிகளை இலங்கை இராணுவத்திற்கு ஒப்படைப்பதற்கும், குறித்த புனர்நிர்மாண பணிகளுக்காக 345 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்க புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரூபவாஹினி தலைவர் பதவி விலக தீர்மானம், சாந்த பண்டார இராஜினாமா-

4545இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரத்ன திஸாநாயக்க பதவி விலகத் தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஓகஸ்ட் 3ம் திகதி இராஜினாமா செய்யவுள்ளதாக சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஊடகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். குருநாகலில் உள்ள தனது இல்லத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்-

45வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது 232,828 குடும்பங்கள் (796,342 நபர்கள்) வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களில் பெரும்பாலான மக்கள் தமக்குரிய மின் இணைப்புக்களை பெறமுடியாத நிலையில் உள்ளனர். எனவே மீள்குடியேற்றப்பட்ட 20,000 குடும்பங்களுக்காவது இலவச மின் இணைப்பை பெற்றுக்கொடுக்கவும், 2015ம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு மின்வழங்கல் இணைப்பை ஏற்பாடு செய்யவுமாக 105 மில்லியன் ரூபாவினை வழங்க மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க மற்றும் மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கொடி விவகாரம்: பிரதேசசபை முன்னாள் தலைவர் கைது-

non national flagகண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.

நாடுகளுக்கு புதிய இராஜதந்திரிகள் நியமனம்-

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கையின் பிலிபைன்ஸ் தூதுவராக அருணி ரணராஜாவும், ரஸ்யாவிற்கான தூதுவராக சமன் வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு-

madu trainரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பள குளறுபடிகளுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கவில்லை என ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களிடமிருந்து கிடைத்த பதில் திருப்திகரமானதாக இல்லையென ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ கூறியுள்ளார். ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களின் சம்பள குளறுபடிகள் தொடர்பில் கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக ரயில்வே ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலைமையின் கீழ் புதிய அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

Read more

உயிரிழை அமைப்பின் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_7706முள்ளந்தணடு வடம் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பினருக்கு (29.07.2015) அன்று எங்கள் அமைப்பின் ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும், பொதுமக்களிடமும் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் இரு கட்டங்களாக முறையே 57,000 ரூபா. 1,11,000 பெறுமதியான மருத்துவ பொருட்களினை வழங்கி அவர்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓரளவேனும் நிவரத்தி செய்துள்ளோம். இந்த வகையில் எமது அமைப்பின் ஊடாக இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வாருங்கள் என தயவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். இதனடிப்படையில் 29.07.2015இல் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள சோலைவனத்தில் வைத்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்திலுள்ள படுக்கை புண்ணினால் பாதிப்புற்று உயிருக்காக போராடிவரும் 31பேருக்கு மருத்துவ Normal saline,  Gauze, Urine bags, plaster, Povidone iodine solution, Catheter என்பனவற்றினை வழங்கியுள்ளோம்.

Read more

கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்-(நேர்காணல் ஆர்.ராம்)

Annar kb (18)தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது என புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். 

கேள்வி:- தற்போது பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் களமிறங்கியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு யாழ் தேர்தல் களம் சவாலானதான மாறியுள்ளதா?

பதில்:- தென்னிலங்கையைச் சேர்ந்த பெயர் ஊர் தெரியாதவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். குறிப்பிட்ட கட்சிகள், சுயேட்சைகள் மட்டும் களத்தில் இருந்தால் அவை தொடர்பில் மக்களுக்கு தெளிவுநிலையொன்று இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமையால் மக்கள் தவறுதலாக மாறிமாறி வாக்களிக்கும் சூழலொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்துள்ள கட்சிகளில் போட்டியிடுபவர்கள் அக்கட்சிகளின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இவர்கள் வெற்றி பெற்றால் அக்கட்சிகளின் நலன்கள் சார்ந்தே செயற்பாடுவார்களே தவிர தமிழ் மக்களின் உரிமைகளை, தேவைகளை முன்வைத்து செயற்படமாட்டார்கள்.

Read more

தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 663 முறைப்பாடுகள் பதிவு-

complaintதேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 663 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகப்படியாக 154 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு 148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறித்து 95 முறைப்பாடுகளும் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை குறித்து 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து 45 அகதிகள் நாடு திரும்பல்-

refugee45 பேரைக் கொண்ட மற்றுமொறு தொகுதி இலங்கை அகதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் திருச்சி, திண்டுகல், கன்யாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் இவ்வாறு 41 இலங்கையர்கள் தாயகம் திருப்பியதாகவும், இறுதியாக கடந்த மாதம் 46 அகதிகள் நாடு திருப்பியதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீளவும் தாயகம் அனுப்புவதற்கு இரு நாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணப் பையில் சடலம் கண்டுபிடிப்பு-

deadகொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை திறந்து பார்த்த வியாபாரி ஒருவர் அதில் சடலம் இருப்பதைக் கண்டதும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமற்போனதாக கூறப்பட்ட தம்­பி­ரா­ஜாவின் மகன் கைது-

 thampi sonயாழில் கடந்த 23ம் திகதிமுதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட மு.தம்­பி­ரா­ஜாவின் 19வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைதுசெய்­யப்­பட்­டுள்ளார். யாழிலிருந்து கொழும்­புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஆகி­யோ­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து அவரை கைது செய்­த­தா­கவும், நேற்றிரவு விசா­ர­ணைகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். திரு­வ­ளவன் தம்­பி­ராஜா அவ­ரது சுயவிருப்பின் பேரில் யாழிலிருந்து கொழும்­புக்கு பஸ்சில் வந்­துள்­ளமை ஆரம்­ப விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னூ­டாக அவர் கடத்­தப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் யாழ்.பொலிஸ் பொறுப்­ப­தி­காரி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் 26ஆவது வீரமக்கள் தினம் மற்றும் கறுப்பு ஜூலை தினம் அனுஸ்டிப்பு-(படங்கள் இணைப்பு)
DSC_6135தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 26ஆம் வருட நினைவுதின நிகழ்வும், கறுப்பு யூலையின் 32ஆம் ஆண்டு நினைவுதினமும் புளொட்டின் பிரான்ஸ் கிளையின் ஏற்பாட்டில் பிரான்ஸின் Metro Gallieni, La Girafe, 154 Avenue Gallieni, 93170 Bagnolet என்னுமிடத்தில் கடந்த 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணிமுதல் 20.00 மணிவரை கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் திரு. கந்தசாமி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகத் தோழர்கள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினமும், வெலிக்கடைச் சிறையிலே 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பவற்றை நினைவுகூரும் வகையில் மேற்படி கறுப்பு யூலை நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.

Read more

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் கட்சியிலிருந்து நீக்கம்-

slfpநல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரியவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில கூறப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் கட்சி யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் கைச்சாத்து-

ranil (5)பொது மற்றும் அரசியல் அமைப்புகள் 110 இணைந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று முற்பகல் இலங்கை மன்றக்கல்லூரில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, மாதுலுவாவே சோபித்த தேரரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளில் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தின் சிறந்த கைப்பணி உற்பத்தி திறன் போட்டியின் முடிவுகள்.!(படங்கள் இணைப்பு)

IMG_0969கடந்த மாதம் நியுகிலியஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில், பனை அபிவிருத்திச் சபையினால் கைப்பணிப் பயிற்சி பெற்றுவரும் பயிற்சியாளர்களுக்கு நடைபெற்ற போட்டியில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் சிறந்த உற்பத்தியினை வழங்கி முதல் இடத்தை கெக்டர் ஜோ.எமில் திரேசா அவர்களும், இரண்டாம் இடத்தை திருமதி யுவச்சந்திரகுமார் லூசியா அவர்களும், மூன்றாம் இடத்தினை திருமதி விக்னேஸ்வரன் உஷாநந்தினி அவர்களும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களை வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வட மாகாண சபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான திரு கந்தையா சிவநேசன்(பவன்), வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியைக்கு தமது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்தார்கள். மேலும் சிறந்த பல உற்பத்தியினை வழங்கி எமது சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

Read more