Header image alt text

கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களிடையேயான விளையாட்டுப் போட்டி-2015 (படங்கள் இணைப்பு)

SAM_2737யாழ். கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் சம்பியன் வெற்றிக்கிண்ணப் போட்டி 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை திரு. சயூட்டன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினரும், பாராளுமன்றத் தேர்தலின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சம்மேளன வடபிராந்திய இயக்குநர் திரு. தவேந்திரன், திரு. சமன் ஜயசிங்க (பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம், அச்சுவேலி), திரு. சண்முகவடிவேலு (இளைஞர் உத்தியோகத்தர், யாழ். மாவட்டம்), திரு. விஜிதரன் (உபதலைவர், இலங்கை இளைஞர் சம்மேளனம்), திரு. அனுஷன் (கிராம உத்தியோகத்தர்), திரு. கோபாலதாஸ் (கிராம உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி இறுதிநாள் சம்பியன் வெற்றிக் கிண்ணப் போட்டிகளாக ஆவரங்கால் கிழக்கு மற்றும் புத்தூர் வடக்கு அணிகளின் பெண்களுக்கான கயிறிழுத்தல் மற்றும் ஆண்களுக்கான உதைபந்தாட்டம் ஆகியன இடம்பெற்றன. மேற்படி கயிறிழுத்தல் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய போட்டிகள் இரண்டிலும் ஆவரங்கால் கிழக்கு அணியினர் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைப் வென்றதுடன், அவர்கள் மாவட்ட ரீதியிலான போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிவைத்தார்கள்.

Read more

சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை மாணவர்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

unnamed (2)யாழ். வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது அழைப்பின் பிரகாரம் வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய நாளிதழான உதயன் பத்திரிகை நிறுவனப் பணிப்பாளருமான கௌரவ. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் சங்கரத்தை சினனம்மா வித்தியாசாலைக்கு விஜயம் மேற்கொண்டு உதயன் பத்திரிக்கையின் 30ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்கட்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

Read more

196 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 300 கட்சிகள், 201 சுயேட்சைகள் களத்தில்-

electionஎதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 300, அரசியல் கட்சிகளும் 201, சுயேட்சை குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. அரசியல் கட்சிகளின் சார்பில் 312 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 225 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 2,498 பேரும் என மொத்தமான 6,151 பேர் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். Read more

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 177 முறைப்பாடுகள்-

electionதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 177 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான 87 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் சுவரொட்டிப் பிரசாரம் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்கள் விநியோகித்தமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான 6 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more

தர்மபுரம் மத்திய கல்லூரியில் “கலைச்சோலை” நூல் வெளியீட்டு விழா-(படங்கள் இணைப்பு)

20150713_113136கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான தர்மபுரம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களின் “கலைச்சோலை” என்னும் 29ஆவது நூல் வெளியீட்டு விழா நேற்று (13.07.2015) திங்கட்கிழமை கல்லூரியின் அதிபரும், பழைய மாணவருமாகிய திரு. பூலோகராஜா அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வின் வெளியீட்டு உரையினை பழைய மாணவரான க.மகேந்திரன் அவர்களும், ஏற்புரையினை பழைய மாணவரான மாணிக்கம் ஜெகன் அவர்களும் வழங்கினார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வைத்திய அதிகாரி திரு. சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகம் சார்ந்தோர் கலந்துகொண்டு நிகழ்வினை வெகுவாகச் சிறப்பித்திருந்தனர்.

Read more

போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

455665யாழ்ப்பாணம் வலி தென்மேற்கில் போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கான வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் ஏற்கனவே உள்ள 60 பிள்ளைகளுடன் நேற்றையதினம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வலி தென் மேற்கு பிரதேச செயலக பிரவுக்குட்பட்ட சுமார் 20 பிள்ளைகளின் வங்கிக்கணக்கில் தலா 1000 ரூபா வைப்பிலிடப்பட்டது. இதன்படி அவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா கல்விக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தினை வட்டு இந்து வாலிபர் சங்கத் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனுசரனையை இ.சரவணபவன் அவர்கள் வழங்கியுள்ளார்.

Read more

வலி மேற்கில் தாய உறவுகளை தலைநிமிரச் செய்வோம் சமூகப்பணி-(படங்கள் இணைப்பு)

unnamed (4)யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் வு.சு.வு வானொலியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற சமூகப்பணி நிகழ்ச்சித் திட்டத்தின் வாயிலாக வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சங்கானை மத்தி கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் அல்லது தந்தையை இழந்த மிக வறுமை நிலையில் உள்ள 22 மணவர்கட்கு 11.07.2015 அன்று சங்கானை இந்து இளைஞர் மற்றத்தில் கற்றல் உபகரணங்களை கையளித்தார். இவ் நிகழ்வில இளைப்பறிய மாவட்ட இளைஞர்கள் சேவை பணிப்பாளரும் குறித்த கிராமத்தின் மூத்த பிரஜையுமாகிய திரு. ச.சிவதெற்சணாமூர்த்தி மற்றும் பிரதேச பெருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வு பிரான்சில் வசிக்கும் திருமதி.லாலா ரவி அவர்களிற்காக மேற்கொள்ளப்பட்டது. Read more