இதுவரை அல்லாத அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டது – இலங்கையில்

cocaineஇரண்டு பில்லியன் ரூபாய் மதிப்புடைய 91 கிலோ கோக்கேயின் போதைப்பொருள் பிரேஸிலிலிருந்து வந்த கொள்கலனில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பிரேஸிலிலிருந்து வந்த சர்க்கரை கொள்கலனில் இருந்து இந்த கோக்கேயின் கண்டெடுக்கப்பட்டது.நிதி அமைச்சின் சிறப்பு போதைப்பொருள் பிரிவு கையகப்படுத்திய இந்த தொகுதி தான் இலங்கையில் இதுவரை பிடிபட்ட கோக்கேயின் அளவில் மிக அதிகமானதாக நம்பப்படுகிறது.

ஊருகொடவத்தை கொள்கலன் வளாகத்தை நிதி அமைச்சரோடு சென்று பார்வையிட்ட இலங்கை ஜனாதிபதி சிறிசேன இந்த சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.