Header image alt text

வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு அதிகம்-எஸ்.வியாழேந்திரன் எம்.பி-

asdsadsadsவடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகங்களின் மட்டும் ஆளுநர்கள் தலையீடுகள் அதிகமாக உள்ளன. இலங்கையிலுள்ள வேறு மாகாணங்களில் இவ்வாறான தலையீடுகள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். அத்துடன் நல்லாட்சியை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை சிறுபான்மைச் சமூகம் வழங்கியுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தாம் முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பில் சனிக்கிழமை(04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகின்றோம். பெரும்பான்மையின மக்களுடன் இணைந்துவாழ விரும்புகின்றோம். ஆனால், இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முனைகின்றனர் என்றார். தற்போது வடகிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் மட்டுமே ஆளுநர்களின் தலையீடுகள் அதிகமாகவுள்ளன. Read more

பிரித்தானிய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்-

sdfsdsddபிரித்தானியாவின் உயர் அதிகாரிகள் இருவர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் நிரந்தர செயலாளர் சைமன் மெக் டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து நிறுவனத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லொவ்கொக் ஆகியோரே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். மேலும், இவர்களின் இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

பஷில் பிணையில் விடுதலை, நாமலிடம் விசாரணை-

basilமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ச பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுகாலை ஆஜரானார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி உட்பட, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சில விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரையொதுங்கியது-

dead.bodyநெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்க முடிலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர், அதனை, யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெடுந்தீவு பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பில் பாடசாலையைப் பூட்டி ஆர்ப்பாட்டம்-

et565கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலை கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாடத்தில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 1ஏபி தரத்தினைக் கொண்ட இப் பாடசாலையில் சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும், இங்கு 100 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ் வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் காரணமாக தற்போது 62 ஆசிரியர்கள் மாத்திரமே இப் பாடசாலையில் உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர். Read more

கொஸ்கம பாதுகாப்பை உறுதிப்படுத்த 96 மணித்தியாலம் தேவை-இராணுவம்-

435454அவிசாவளை – கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 05.30 அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதேவேளை, இந்த சம்பவத்தால் களஞ்சியசாலையில் இருந்த பாரிய குண்டுகள் உட்பட ஆயுதங்கள் சில அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கிருந்த வீடுகள் சில பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன. வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதோடு, குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள குடியிருப்புக்களில் மாத்திரம் மக்கள் மீண்டும் வரலாம் என, இன்றுகாலை இராணுவம் அறிவித்தது. இந்நிலையில், அப் பகுதியில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பின் அவற்றை தீண்டாது, உடன் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு இராணுவம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் காண்பவர்கள் 011 3 81 86 09 அல்லது 011 2 43 42 51 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. Read more