Header image alt text

சட்ட விரோத சிறுநீரக வணிகம் ராஜ்குமார் ராவ் குறித்து இலங்கை போலீசார் விசாரணை

kidneyசட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் ராவ் எனும் பிரதான சந்தேக நபர் இலங்கையில் நடைபெற்ற சட்ட விரோத சிறுநீரக வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதனை ஆராய்வதற்கு சிறப்பு போலீஸ் குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகள், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது போலீசார் இதனை அறிவித்தனர். Read more

ஜெயலலிதா – நிர்மலா சீதாராமன் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்க்க வலியுறுத்தல்

jaya_nirmala_seetharamanமத்திய – மாநில அரசுகளுக்கிடையில் முக்கியப் பிரச்சினையாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியைப் பொருத்தவரை, தமிழகத்தின் நிதி சுதந்திரத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் பல யோசனைகள் ஏற்கப்பட்டாலும், இன்னும் பல அம்சங்கள் தமிழகத்தைப் பாதிக்கும் என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, ஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்களுக்காக புதிதாக 50 ஆயிரம் வீடுகளும், ஏற்கெனவே உள்ள 50 ஆயிரம் வீடுகளைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். Read more

இதுவரை அல்லாத அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டது – இலங்கையில்

cocaineஇரண்டு பில்லியன் ரூபாய் மதிப்புடைய 91 கிலோ கோக்கேயின் போதைப்பொருள் பிரேஸிலிலிருந்து வந்த கொள்கலனில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பிரேஸிலிலிருந்து வந்த சர்க்கரை கொள்கலனில் இருந்து இந்த கோக்கேயின் கண்டெடுக்கப்பட்டது. Read more

இந்தியப்பிரதமர் மோடி – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு

jaya_modiசுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள், நிதி ஆதாரங்கள், மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, 96 பக்க அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதல்வர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் கமிட்டியையும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். Read more