Header image alt text

யாழில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை திறந்து வைப்பு-

abdul kalamஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை இன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உருவ சிலையானது வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா ஆகியோரினால் யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய கோனர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

காணாமல் போன மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிப்பு-

missingமாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயிருந்தனர். கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-

k1முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இயங்கிவரும் ஒளிரும் வாழ்வு அமைப்பு மண்ணாங்கணடல், வசந்தபுரத்தில் தாய் மற்றும் தாய் தந்தையை இழந்து மாற்றுத்திறனாளி உறவினர்களுடன் வாழ்ந்து வரும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் முகமாக இரு துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு விண்ணப்பித்திருந்தனர். இதுபோன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் செ.திலக்சிகாவும் விண்ணப்பித்திருந்ததுக்கு அமைய இவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக இவ் மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் எமது சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த அண்ணாமலை கிருபாகரன் அவர்கள் 60000 ரூபா நிதியினை வழங்கியிருந்தார். Read more

பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

I.G.Pபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மைக் காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக சீர்கேடுகள் தொடர்பாக பதவியேற்றுள்ள பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் நிலைமைகளை விளங்கி குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சரியான ஒரு முன்நகர்வை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். Read more

ஜனநாயக நாடாக கருதுமுன் சீர்திருத்தங்கள் அவசியம்-ஐ.நா அறிக்கையாளர்-

monica pindoசட்டத்தின் ஆட்சியுடன் கூடிய நிலையான ஜனநாயகப் பாதையில் செல்லும் நாடாக இலங்கையை கருதுவதற்கு முன்னர், மேலும் பல சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுவதாக, நீதிபதிகள், சட்டவுரைஞர்களின் சுயாதீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்குக் கூறியுள்ளார். தனது, அண்மைய இலங்கை விஜயம் தொடர்பாக, அடுத்த வருடம் ஒரு விரிவான அறிக்கையை முன்வைக்கப்போவதாக, தற்போது நடைபெறும், மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் கூறினார். ‘சித்திரவதைகள் மற்றும் கேவலமான நடவடிக்கைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் யுவான் ஈ மென்டெஸ{டன், இலங்கை நான் சென்றிருந்தேன். எனக்கு அங்கு நல்ல வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தது. அதற்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். எனது அறிக்கையைத் தயாரிக்கும் போதும், நான் எமது கலந்துரையாடல்களைத் தொடர விரும்புகிறேன்’ எனக்; கூறினார். Read more