Header image alt text

கொஸ்கமுவ தீ விபத்தில் இராணுவவீரர் உயிரிழப்பு-

asdsadsdகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தவிர, காயமடைந்த இருவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து குறித்த முகாமை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் கைவிட்டு சென்ற வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறியுள்ளார். அத்துடன் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். Read more

தியாகி பொன்.சிவகுமாரனின் 42ம்வருட நினைவுதினம்-

sdfdsfsfsதியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 42ம் வருட நினைவுதினம் இன்றாகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார்.

இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது பொன். சிவகுமாரன் அவர்கள் அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார்.

இராணுவ முகாம் தீ விபத்து, அவிசாவளை பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு விடுமுறை-

fireகொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹைலெவல் வீதியின் ஹன்வெல்லவில் இருந்து கொஸ்கம வரையான பகுதி மூடப்பட்டுள்ளது. குறித்த முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப் பகுதியை கண்காணிக்க விமானப் படை விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விமானப் படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப் பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தரைப் படை, கடற்படை மற்றும் வான் படையினர் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. Read more

ஐதேகவுடன் இணைந்தே போட்டி-அமைச்சர் சரத் பொன்சேகா-

sarathஎதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதும் தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியாகவே செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். இன்று காலை கண்டியில் வைத்தே சரத் பென்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் இலங்கை மக்களுக்கு மீண்டும் உதவி-

bangladeshவெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து வந்துள்ள குறித்த கப்பல் இன்று பகல் கொழும்பை அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, பங்களாதேஷ் முன்னதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பல அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

sri lanka300ற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணைக்குழு செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அரச நிர்வாக சேவை,கணக்காளர்கள்,கல்வி நிர்வாக சேவை, வைத்தியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக சில அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒழுக்காற்று விசாரணைகளை தாமதப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தக் குற்றங்கள் குறித்து அமர்வில் முறையிட முடிவு-

sivajiயுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஜூலை மாதம் 13ம் திகதி அளவில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். இவருடன் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சகிகரனும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.

யாழில் மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது-

arrest (2)யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பொதுவிடத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்கவின் 2ஆயிரத்து 260பேர் முகாம்களில் தங்கவைப்பு-

aranaikeஅரநாயக்க சாமசர மலை மற்றும் அம்பலகந்த ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் இடம்பெயர்ந்த 2 ஆயிரத்து 260 பேர் இன்னும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

794 குடும்பங்களை சேர்ந்த இவர்கள், அரநாயக்க பிரதேச செயலாளர் காரியாலம் வசம் உள்ள பாடசாலைகள் மற்றும் விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

பாரியளவு சுண்ணாம்பு கல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது-

sunnampuயாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்பு கல் அகழ்ந்து கொண்டுச்சென்ற சந்தேகத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி வலளாய் பகுதியிலிருந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக, பாரியளவில் சுண்ணாம்பு கற்களை அகழ்ந்து எடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெக்கோ இயந்திரங்கள் 5 மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் 2 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.