தியாகி பொன்.சிவகுமாரனின் 42ம்வருட நினைவுதினம்-

sdfdsfsfsதியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 42ம் வருட நினைவுதினம் இன்றாகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார்.

இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது பொன். சிவகுமாரன் அவர்கள் அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார்.

இராணுவ முகாம் தீ விபத்து, அவிசாவளை பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு விடுமுறை-

fireகொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹைலெவல் வீதியின் ஹன்வெல்லவில் இருந்து கொஸ்கம வரையான பகுதி மூடப்பட்டுள்ளது. குறித்த முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப் பகுதியை கண்காணிக்க விமானப் படை விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விமானப் படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப் பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தரைப் படை, கடற்படை மற்றும் வான் படையினர் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும், அப் பகுதியைப் பார்வையிட வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு, அவிசாவளை பகுதியைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களும் நாளை மூடப்படவுள்ளன. கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற திடீர் வெடிப்பு காராணமாக ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.