Header image alt text

“காணவில்லை” எனும் சிறப்புச் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்-

missingயுத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மோதல்களின்போது காணாமல் போனவர்களுக்கு, ‘காணவில்லை’ எனும் பெயரில் சிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களினால் அல்லது அம்மோதலின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமாகவும், அரசியல் அமைதியின்மை காரணமாகவும் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் போயுள்ள நபர்களை பதிவு செய்வதற்கான தேவை எழுந்துள்ளது. அவ்வாறான நபர்களை பதிவு செய்வதன் மூலம் அல்லது காணாமற் போன நபர்களது உறவினர்களுக்கு ‘காணவில்லை’ எனும் சான்றிதழை வழங்குவதன் மூலம், காணாமற்போன நபர்களது சொத்துக்களையும் உடைமைகளையும் தற்காலிகமாக முகாமைத்துவம் செய்வதற்கு வழிவகுக்கும். Read more

பிரசன்ன மற்றும் அவரது மனைவி ஆகியோர்க்கு பிணை-

prasannaபாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. காணி விவகாரம் ஒன்றில் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சதுப்புநிலத்தை நிரப்புவதற்காக அந்நிலத்தை சூழ குடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கி, 64 மில்லியன் ரூபா பணத்தை கோரியதோடு, அத்தொகையிலிருந்து 15 மில்லியனை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, பிரசன்ன ரணதுங்கவுக்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்-

ertereffமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக எல்லைக்குள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் மிருக வேட்டை இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது மரக்குற்றிகளை ஏற்றிய வண்டியில் பயணித்த இராணுவத்தினரால் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மூவர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தனர். Read more

சலாவ மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம், வீடுகளில் கொள்ளை-

aarpattamகொழும்பு – அவிசாவளை வீதியின் சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியை மறித்து அப்பிரதேச மக்கள் இன்றுமுற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வீதியை மீளத் திறப்பதாக நேற்று இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். வீதியை திறக்கு முன்னர், தமது வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சுத்தப்படுத்துமாறு கோரியே அப்பகுதி மக்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் களஞ்சியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45க்கு ஏற்பட்ட தீ விபத்தினால் கிளம்பிய துகள்கள், ரவைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவி வீடுகளில் சிதறிக்கிடக்கின்றன. இதேவேளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் தீ பரவியமையால் அந்த பகுதியிலிருந்து வெளியேறியவர்களின் வீடுகளில் கொள்ளைச்சம்பங்கள் இடம்பெற்றமை தொடர்பில் 28 முறைபாடுகள் பதிவாகியுள்ளன. Read more