வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் மேசைக் கணனித் தொகுதி வழங்கிவைப்பு-

fgfgfgfgfgவடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் சொந்த நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட

கணனிப் பயிற்சி வகுப்பிற்கு உதவும் முகமாக நேற்று ஒரு மேசைக் கணனித் தொகுதியினை வித்தியாபுரம் சாயி இல்லத்திற்கு அவர் வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி நிகழ்வில் வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் க. தவராசா மற்றும் கிராமத்தின் சமூக மட்ட அமைப்பினர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை முன்னாள் உறுப்பினரின் வியாபார நிலையம்மீது தாக்குதல்-

image-0.02.01.7e64958c761154e8606dac236eb9df0165a904bf5c43205e86b9df7f1f08331a-V_resizedதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் வலி தென் மேற்கு பிரதேச சபையினுடைய முன்னாள் உறுப்பினர் ஏ.ஜோன் ஜிப்ரிக்கோ அவர்களின் பண்டத்தரிப்பு சண்டிலிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் குறித்த வியாபார நிலையத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

ஏ.ஜோன் ஜிப்ரிக்கோ அவர்கள் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் மானிப்பாய் பிரதேச சபையில் ஓர் இளம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டியவர். அத்துடன் இவர் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அரங்கியற் கலைக் கல்லூரியின் நுண்கலைமானி பட்டதாரியாவார். இத் தாக்குதலானது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாமென பிரதேசமக்கள் சந்தேகிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.