முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டத்தை பார்வையிட்டவாறு மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.