Header image alt text

29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2018) திங்கட்கிழமை காலை 9.30மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், ’29 வது வீரமக்கள் தினம்’ நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.

மேற்படி ‘வீரமக்கள் தினம்’ நிகழ்வுகளாக ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மறைந்த அனைத்து அமைப்புத் தலைவர்களுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், பொதுமக்களினால், ‘மக்களின் விடுதலைக்காக’ விதையாகிப் போன கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களுக்கான மலரஞ்சலி செலுத்தும் வைபவம் நடைபெற்றது.
Read more

புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று 15.07.2018 ஞாயிறு மாலை 3.00 மணியளவில் பிரான்ஸின் Salle Maxime Jobert , 21 Bis rue villot 93120 la Courneuve , Tram 1 : arrêt – Hôtel de Ville de La  Courneuve என்னுமிடத்தில் தோழர் இளையதம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களுடன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கணேசலிங்கம் (வெள்ளையன்), தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் உதயகுமார் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் பிரதிநிதியும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் உரைநிகழ்த்திய புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம்உயிரை அர்ப்பணித்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்!

எதிர்வரும் 15.07.2018 (ஞாயிறு) மாலை 15.00க்கு நடைபெறவுள்ள வீரமக்கள் தின நினைவஞ்சலியில் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

இடம்: Salle Maxime Jobert ,

21 Bis rue villot 93120 la Courneuve ,

Tram 1 : arrêt – Hôtel de Ville de La  Courneuve

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
– பிரான்ஸ் கிளை-

மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6,500 ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தளவாயில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளும் பல்வேறு தேவைகளும் இருக்கின்றன. Read more

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 14ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் 10.30வரை நெடுந்தீவு ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை முதலான பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணாமல்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

முற்பகல் 10.45 முதல் 12.15 வரை கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி முதலான பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணாமல்போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

29ஆவது வீரமக்கள் தினத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்றுகாலை (13.07.2018) வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், நகரசபை உறுப்பினருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள், யுத்த பாதிப்புக்குள்ளான பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் கோகலே இந்திய வெளியுறவு செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். Read more

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்துப் பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, நேற்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே, இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி சிறிசேன, கடந்த 2016ஆம் ஆண்டில் தாய்லாந்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே, தாய்லாந்துப் பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைதந்த தாய்லாந்துப் பிரதமரை, ஜனாதிபதி வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுகள் முழங்க, மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது. Read more