Header image alt text

மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று பிற்பகல் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு லவ் லேனிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவிற்குள் இருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read more

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளோம். Read more

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ´இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம்´ என சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. Read more