Header image alt text

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து அது இறுதியில் கைகலப்பில் நிறைவடைந்துள்ளது. மேலும், இன்று காலை இலங்கைக்கு வருகை தந்த குவைத் நாட்டு தம்பதிகள், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையில் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை இன்றுகாலை கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய தண்டவாளத்திற்கு அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய தண்டவாளங்களையே குறித்த சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்குப் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் மற்றும் குடியகல்வு குடிவரவு அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். கட்டுநாயக்க விமான சேவைகள் அதிகார சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இதற்கென விமான நிலையத்தில் அமைக்கப்படும் ஈ-கேட்டைப் பயன்படுத்தி விமான நிலைத்திற்குள் பிரவேசிக்க முடியும். Read more

பாதுகாப்பு அமைச்சின், 2017ம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையின் பிரகாரம், முப்படையினரும் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்படி 4 ஆயிரத்து 318 ஏக்கர் அரச காணிகளும், 842 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரத்து 811.34 ஏக்கர் வடக்கிற்கும், 349.25 ஏக்கர் காணிகள் கிழக்கிற்கும் உரியன. Read more

டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அரிதான நீல நிற மாணிக்கக்கல் ஒன்றை மீட்டுள்ளதாக, டுபாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார்.

கடந்த மே மாதம் 25ம் திகதி டுபாயில் நகர நிறுவனம் ஒன்றில் இருந்து இந்த மாணிக்கக்கல் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நூற்றுக்கணக்கான விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், பல சி.சி.டி.வி காணொளிகளும் பார்வையிடப்பட்டு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். Read more