பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது. Read more
மன்னார், மடு அன்னையின் வருடாந்த திருவிழாவுக்கு செல்லும் பக்கதர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இருந்த இன்று காலை 7.30 மணிக்க குறித்த ரயில் புறப்பட்டதுடன், பிற்பகல் 3 மணி அளவில் மடு ரயில் நிலையத்தை அண்மித்துள்ளது.
செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த நான்காம் திகதி புளொட் அமைப்பு சார்பில், மறைந்த கழக செயலதிபர் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள் நினைவாக சுவிஸில் வீரமக்கள் தினம் அனுட்டிக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்ற விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்பட்டு வருகின்றது. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் கனிஷ்ட தலைவர்கள் பலரும் கோரி வருகின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விடாப்பிடியாக இருந்து வருவதாகவே தெரிகின்றது.
அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள் மத்தியில் காணப்படுவதாக பதவி முடிந்து செல்லும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தை சீர்த்திருத்த உடனடியாக நடிவடிக்கை எடுக்குமாறு, சுமார் 190இற்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 30ற்கும் மேற்பட்ட பொது அமைப்புகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.