Header image alt text

கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பொன்று நேற்று Phnom Penh நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN உம் கலந்துகொண்டார். இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

அமெரிக்கா செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதுடன் அங்கு பரபரப்பான சூழ்நிலைகள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் அங்கு இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வழிபாட்டுத் தலங்கள், சந்தைக் கட்டடத் தொகுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக காணப்படும் சூழலில் செல்லும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read more

யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்கு உட்பட்ட ஏ9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள 2 வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே தீப்பற்றி எரிந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தை அடுத்து யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக குறித்த குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் நேற்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடி இன்று காலை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த நபர் பகல் வேளைகளில் மேசன் தொழில் செய்வதோடு, மாலை வேளைகளில் குறித்த குளத்தில் சென்று மீன் பிடித்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் “சுவிஸ் வீரமக்கள் தின” நிகழ்வு 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை 4552 Derendingen எனுமிடத்தில், தோழர். சுவிஸ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுடன், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி போன்ற நிகழ்வுடன், வரவேற்பு உரையும், சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை போன்றனவும் நடைபெற்று, மதிய போசனத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
Read more

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் புளொட்டின் வீரமக்கள் தின நிகழ்வு லண்டன் Bridge End Close, Off Clifton Road, Kingston Upon Thames, KT2 6PZ  என்னுமிடத்தில் 03.08.2019 சனிக்கிழமை மாலை 4.00மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் இணைப்பாளர் தோழர் அல்வின் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

டொக்டர் சுரேஸ் சுரேந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெற்றன. தொடர்ந்து பிரமுகர்களின் உரைகள் இடம்பெற்றன. இதில் ஜேர்மனியிலிருந்து கலந்து கொண்டிருந்த கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் செல்லத்துரை ஜெகநாதன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் பொறுப்பாளர் அரவிந்தன், டொக்டர் பகீரதன் அமிர்தலிங்கம், ஜே.வி.பியின் ரஞ்சித் விஜயசிறீவர்த்தன, ரெலோவின் லண்டன் பொறுப்பாளர் சாம் சம்பந்தன், Read more

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.
காலம்:- 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00மணி முதல்,
இடம்:- “MAXWELLS” மண்டபம் Unt.Emmengasse -2, 4552 Derendingen. (SO)

நிகழ்ச்சி நிரல்..
தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான நினைவுச்சுடர் ஏற்றல், மலரஞ்சலி, மௌன அஞ்சலி, வரவேற்புரை, சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு எமது உரிமை போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் தமது அஞ்சலியை செலுத்துமாறு அன்போடும் உணர்வோடும் வேண்டுகிறோம்.

உரிமைக் குரலும் மேம்பாட்டு பணியும் இணைந்த தடத்தில் உறுதியாய் உத்வேகத்தோடு பயணிப்போம். ‘ஓர் அணியாய் நிற்போம், உரிமைகளை வென்றெடுப்போம்’

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

யாழ். உடுவில் ஞானவைரவர் ஆலய புனரமைப்பு வேலைகள் இன்றுகாலை .10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more

யாழ். உடுவில் இராமலிங்கம் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுகாலை 9.00 மணியளவில் நடைபெற்றது. Read more

யாழ். சங்குவேலி பிள்ளையார்கோவில் குறுக்குவீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுமாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. Read more