பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 August 2019
Posted in செய்திகள்
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அங்கு பலதரப்பட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 9.45 அளவில் பிரதமர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ளார். இதன்பின்னர், மயிலிட்டி வடக்கு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு தொகுதிகளை திறந்து வைக்கவுள்ளார். இது தவிர அவர் இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
மன்னார், மடு அன்னையின் வருடாந்த திருவிழாவுக்கு செல்லும் பக்கதர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இருந்த இன்று காலை 7.30 மணிக்க குறித்த ரயில் புறப்பட்டதுடன், பிற்பகல் 3 மணி அளவில் மடு ரயில் நிலையத்தை அண்மித்துள்ளது.
இதேவேளை, நாளை மாலை 4.30 க்கு மடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் குறித்த விசேட ரயில் இரவு 12.30 க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ள.
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, உயிரிழந்த மாணவிகள் நினைவுகூறப்பட்டதுடன், சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
கடந்த நான்காம் திகதி புளொட் அமைப்பு சார்பில், மறைந்த கழக செயலதிபர் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள் நினைவாக சுவிஸில் வீரமக்கள் தினம் அனுட்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி சக்தி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களும், உறவுகள் இல்லாத பிள்ளைகளும், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த பிள்ளைகள் என பலதரப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த 32 பெண் பிள்ளைகளும் 4 சிறுவர்களும் இல்லத்தில் தங்கியுள்ளனர். குறிப்பாக யுத்தம் நடந்த பிரதேசத்தை சேர்ந்த பிள்ளைகளே இங்கு உள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்ற விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்பட்டு வருகின்றது. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் கனிஷ்ட தலைவர்கள் பலரும் கோரி வருகின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விடாப்பிடியாக இருந்து வருவதாகவே தெரிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தானே வேட்பாளராக போட்டியிடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக உள்ளார். அவருக்கு ஆதரவாகவும் பல சிரேஷ்ட தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read more
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள் மத்தியில் காணப்படுவதாக பதவி முடிந்து செல்லும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து விடைபெறவுள்ள நிலையில் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய அவருடைய இறுதி நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கத்தினால் சில முன்னேற்றகரமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், தகவல் அறியும் உரிமையை அடிப்படை உரிமையாக்குவதற்கு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். Read more
Posted by plotenewseditor on 14 August 2019
Posted in செய்திகள்
முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தை சீர்த்திருத்த உடனடியாக நடிவடிக்கை எடுக்குமாறு, சுமார் 190இற்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 30ற்கும் மேற்பட்ட பொது அமைப்புகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கங்கள் இந்த சட்டத்தினை சீர்திருத்தத் தவறியமையானது மிகவும் நீண்ட காலப் பிரச்சினையாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அவர்கள் இணைந்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 13 August 2019
Posted in செய்திகள்
ஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளார். Read more