வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் அதிகாரசபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா-2019

நிகழ்வானது 03.09.2019 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் யாழ். ஏழாலை முத்தமிழ் மன்ற அமரா் சிதம்பர திருச்செந்திநாதன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.