யாழ். வலிகாமம் கிழக்கு ஊரெழுவில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் 274வது மாதிரிக் கிராமமும் யாழ். மாவட்டத்தின் 5வது மாதிரிக் கிராமமுமான பொக்கணை கிராமம் நேற்று (09.09.2019) அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரமலிங்கம் சித்தார்த்தன், எம்ஏ சுமந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன், அரசாங்க அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.