தேர்தல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவவகம் நாளை முதல் செயற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும்  ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான விசேட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த அலுவலகத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை செய்ய முடிவதுடன், தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாவட்ட ரீதியில் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையில் குறித்த கண்காணிப்பு நிலையம் செயற்படும்.