நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (23) முற்பகல் 11.30 மணிமுதல் நாளை (24)  முற்பகல் 11.30 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

இதேவேளை, நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என, காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது