வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரண்டு கட்டங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அவர்களை தனிமைப்படுத்துவது போதுமானதென, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர், சகல தகவல்களையும் சமர்ப்பித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும் என்றும், நாட்டுக்கு வருவதற்கு முன்னர் 96 மணித்தியாலங்களில் மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் கொவிட் தொற்று இல்லை என்பதற்கான உறுதிச் சான்று மற்றும் நாட்டை வந்தடைந்து 48 மணிநேரத்துக்குள்ள மீண்டும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.