முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலாக வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
		    
யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்  ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உறுதி வழங்கியுள்ளார். 
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த  அளுத்கமகே உத்தரவிட்டார். 
தலைமன்னார் – பியர்  பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம்    தனியார் பஸ்,  ரயில் மோதி ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை,  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது. 
ரயில் என்ஜின் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என, ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய  மாலை நேர ரயில் சேவைகள் தாமதிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. 
திருகோணமலை நகரின் என்.சி.வீதி, மத்திய வீதி, மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பிரதேசங்களில் இம்மாதம் 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள், இன்று (17) அதிகாலை வெளியிடப்பட்டன. 
தலைமன்னார் விபத்தில் ஒன்பது வயதான மாணவன் பலியாகியுள்ளார், சம்பவத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர், இன்று(16)  மாலை 06 மணியளவில் கொள்ளுபிட்டிய பகுதியில்  கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு – காந்திபூங்காவில் இன்று (16) கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.