மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை  (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்கள் பணிக்கு செல்லும் வகையில், காலை மற்றும் மாலை வேளைகளில் பொது போக்குவரத்துக்களை மாகாணங்களுக்கு இடையில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இடைப்பட்ட காலப் பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தற்போதைய சூழ்நிலையில் ஆரம்பிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.