15.07.1998இல் மரணித்த கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்), அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன், மைத்துனர் தாசியஸ் ஸ்டெனிஸ் லொஸ் மற்றும் மெய்க்காவலர்களான நோயல் ஹெட்டியாராய்ச்சி, சரத் வீரசேகர ஆகியோரின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
15.07.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் கிறிஸ்டி (இ.வசந்தராஜா- திருகோணமலை) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
பெரிதாக எதுவும் நடக்கவில்லை எனின் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டை முழுமையாகத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 18 ஆண்களும் 19 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதில், 30 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 7 பேர் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் எழுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் வவுனியா கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 25 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியில் தலா 1200 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் கிராம சேவகர் திருமதி கௌசல்யா லெனின் அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று (2021/07/13) வழங்கி வைக்கப்பட்டன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 32வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பமானது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று (13.07.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.