கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கருக்காய்த்தீவு, கிளிநொச்சி விவேகானந்தநகர், ஊற்றுப்புலம், கோணாவில், அக்கராயன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குப்பட்ட பெண் தலைமைத்துவ மற்றும் முதியோர்களைக் கொண்ட 25 குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 2000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று (2021/07/04) வழங்கி வைக்கப்பட்டன. Read more
04.07.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ஜஸ்டின் (வைரமுத்து மேகநாதன்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
நாட்டில் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், ஜூலை 19 வரை நீடிக்கப்பட்டன அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, நாளை 5ஆம் திகதி முதல், 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் விமான நிறுவனம், டுபாய்க்கான விமானப் பயணிகளுக்கான சேவைகளை ஜூலை 15 வரையிலும் இடைநிறுத்திவைத்துள்ளது. ஐக்கிய அமீரக அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அமையவே, இச்சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில், இன்று (04) இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இதுவரை 2,978,245 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு புதுமண்டபத்தடி கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட முதியவர்கள் 33 பேருக்கு
நாட்டில் மேலும் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் (02) நாட்டில் மேலும் 34 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,191 ஆக அதிகரித்துள்ளது.