கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் வவுனியா நகரசபையின் சுகாதாரப் பிரிவு மற்றும் வேலைப்பகுதி ஊழியர்களில் பெண் ஊழியர்கள் 25 பேருக்கு கழகத்தின் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியில் தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களுடன் தலா 500 ரூபாய் பணமும், Read more
100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன், கடுமையான சுகாதார நடைமுறைகளின் கீழ், குறித்த பாடசாலைகள் திறக்கப்படும் என, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
ஆட்பதிவு திணைக்களம், ஜுலை 5ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது. தொலைபேசி மூலம் திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
3 தாதியர் சங்கங்கள் நேற்று(01) ஆரம்பித்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (02) தொடர்கிறது. அரச தாதி அதிகாரிகளின் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளன.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுற்றுலாச் செல்வதற்கு,தமது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது.இதற்கமைய, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதையே ஐக்கிய அரபு இராச்சியம் தடை செய்துள்ளது.
01.07.1991இல் வவுணதீவில் மரணித்த தோழர் குருசாமி (வீமாப்போடி அருளானந்தம் – கொத்தியாவளை) அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
நாட்டில் மேலும் 1,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று (01) காலை முதல் 2 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சித்திரவதைக்கு உட்பட்ட 28 வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர் கஜேந்திரன் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுநாளை நினைவேந்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பேர் தொடர்பான சமர்ப்பணங்களை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.