 நாட்டில் மேலும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310,494ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மேலும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310,494ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,792 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 278,910 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 25,488 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, 36 ஆண்களும் 31 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,508 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.